இந்த வாரம் விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யலட்சுமி நடித்த கட்டாகுஸ்தி 2, அஜய்கார்த்தி, அஞ்சனா நடித்த டார்க், தெலுங்கு டப்பிங் படமான நாகபந்தம் மற்றும் புதுமுகங்கள் நடித்த இருமுனை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுகாக
கட்டாகுஸ்தி 2
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, யோகி பாபு, கருணாஸ், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடித்த காமெடி கலந்த குடும்ப கதை. முதல் பாகத்தில் காதல் சண்டை காமெடி என கதை நிகழ்ந்தது இதில் கணவன் மனைவி பாசம் பிரிவு அன்பு சண்டை என கதை செல்கிறது இரண்டாம் பாகத்தில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் தியாகத்தை வலியை சொல்வது போல் காமெடியாக கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் சமையல் செய்வது மனைவிக்கு உதவுவது மகளை கவனிப்பது என வாழ்க்கையை ஓட்டும் கேரக்டர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது பாதியில் கொஞ்சம் அழுத்தமான கேரக்டருக்கு மாறுகிறார் அப்பாவித்தனமான கொஞ்சம் காமெடி கலந்த அதே சமயம் பல ஆண்களின் குணத்தை பிரதிபலிக்கும் அவர் கேரக்டரை பெண்களுக்கு பிடிக்கும் டீச்சருடன் ஆடல் பாடல், மனைவியுடன் மோதல் ,மகள் மீது பாசம் என அந்த கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறார் விஷ்ணு விஷால். முதல் பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும் இதில் எமோஷனலாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. சம்பவக்காரி பாடல் காட்சியில் கலக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் விசில் பறக்க கைத்தட்டல் வாங்குகிறார்.

இவர்களை தவிர பக்கத்து வீட்டுக்காரராக வரும் கருணாகரன், மாமா வரும் கருணாஸ் உறவினராக வரும் முனிஸ்காந்த் மற்றும் நீதிபதியாக வரும் ரம்யா கிருஷ்ணன் கிளைமாக்சில் கோச் ஆக வரும் யோகி பாபு ஆகியோரும் தங்கள் பங்கிற்கு கலக்கி படத்தை கலகலப்பாக கமர்சியலாக ஆக்கி இருக்கிறார்கள். டீச்சராக வரும் மோக்ஷா, விஷ்ணு விஷால் மகளாக வரும் சாரா ஆகியோரை மறக்க முடியாது .இருவரின் நடிப்பு, காட்சிகள் படத்திற்கு பெரிய பலம்.
முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவும் இரண்டாவது பாதி நகர்கிறது. சம்பவக்காரி பாடல் காட்சி பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார். ஷான்ரோல்டன். அனைத்து தரப்பும் சிரிக்க வேண்டும் ரசிக்க வேண்டும். தங்கள் குடும்ப விஷயங்களை அசை போட்டு பார்க்க வேண்டும். தியேட்டரில்
சந்தோஷமாக செல்ல வேண்டும் என கதையைக் கொண்டு சென்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் செல்ல அய்யாவு குறிப்பாக விஷ்ணு விஷால் ஐஸ்வர்ய லட்சுமி அன்பு சண்டை மற்றும் டீச்சர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மகள் சாரா சம்பந்தப்பட்ட இடங்கள், கோர்ட் சீன் கிளைமாக்ஸ் ஆகியவை மனதில் நிற்கிறது. எமோசனல், சிரிப்பு இரண்டும் கலந்த கலவை ரசிக்க வைக்கிறது. குடும்ப கதை என்றாலும் அதை ஜனரஞ்சகமாக சொல்லியிருக்கிறார். காமெடியும் விறுவிறுப்பும் திருப்பங்களும் இருப்பது கட்டாகுஸ்தி 2வை இந்த வார படங்களில் முதலிடத்தில் வைத்து இருக்கிறது குழந்தை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம். படம் பார்த்துவிட்டு வந்தால் கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும், குழந்தைகள் மீது பாசம் கூடும்.
டார்க்
2 கொலை, 1 தற்கொலை நடந்த கே.பாக்யராஜ் வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார் ஹீரோ அஜய் கார்த்தி. இரவில் அந்த வீட்டு டிவியில் அப்படி போடு பாடல் தானாக ஒளிபரப்பாகிறது. சில மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. ஹீரோ பயப்படுகிறார். அவர் தூக்கம் தொலைகிறது. அவர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகிறார். அடுத்த நடப்பது என்ன? அந்த கொலைகளுக்கான காரணத்தை போலீஸ் ஆபீசர் நட்டி கண்டுபிடித்தாரா? ஹீரோவுக்கு, பாக்யராஜ்க்கு என்னாச்சு என்பது டார்க் படத்தின் கதை

திரில்லர், சைக்காலஜி கலந்த ஒரு ஹாரர் படத்தை துப்பறியும் கோணத்தில் எடுத்து இருக்கிறார் இயக்குனர் கல்யாண்..டாடா கணேஷ் கே பாபு கதை எழுதி இருக்கிறார். அப்பாவி இளைஞனாக, மன சிதைவால் பாதிக்கப்பட்டவராக, பேய் பயத்தில் நடுங்குபவராக அஜய் கார்த்தி கலக்கி இருக்கிறார். அவருக்கும் பாக்யராஜ்க்குமான உரையாடல், காட்சிகள் படத்தின் பிளஸ். அதேபோல் மனபாதிப்பு காட்சிகளிலும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். வீட்டு ஓனராக வரும் பாக்யராஜ் மறைவுக்குபின் வரும் முதல் படம். அவர் நடிப்பும், டயலாக் டெலிவரியும்.அந்த கேரக்டர் தன்மையும் நமக்கு நெருக்கமாகிறது. போலீஸ் ஆபிசர் நட்டியும் தனக்கான வேலையை சரியாக செய்து இருக்கிறார். பாக்யராஜ் மகளாக வரும் அஞ்சனாவுக்கு குறைவான சீன் என்றாலும் கிளைமாக்சில் முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த கொலை, தற்கொலை, தொடக்க சீன் களுக்கு கடைசியில் விடை கிடைக்கிறது. ஆனாலும் குழப்பமான திரைக்கதை, ஹாரர், கிளைமாக்சில் அவர் கேரக்டர் வழியாகவே பல உண்மைகள் தெரிகிறது. பல விடை கிடைக்கிறது.
பேய் பயம், டிவிஸ்ட், கிளைமாக்ஸ்.
இருமுனை
யாராக இருந்தாலும், எல்லா வகையிலும் மனைவியின் ஆசை, தேவைகளை கணவன் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணம், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் மனைவி. தவறான முடிவு எடுப்பாள்,அதனால் என்ன நடக்கும் என்ற கதை. தானே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் கிரி. பிழைப்புக்காக மனைவி சஜினி பாண்டியுடன் ஊரைவிட்டு வெளியேறிய கிரி, பெரிய மனிதர் ஒருவரிடம் நாள் வாடகைக்கு கால்டாக்ஸி ஓட்டுகிறார். பணக் கஷ்டத்தால் கணவரை விட்டு பிரிய நினைக்கும் சஜினி பாண்டிக்கு அந்த பெரிய மனிதர் ப வலைவீசுகிறார். அப்போது அப்பகுதியில் அடுத்தடுத்து சில பெண்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். துப்பு கிடைக்காமல் போலீசார் தவிக்கின்றனர். கொலை செய்தது ஏன்? கொலையாளி யார்? அதற்கும் இந்த தம்பதிக்கு என்ன தொடர்பு என்பது கிளைமாக்ஸ் கதை நாயகனாக நடித்த கிரி ஓரளவு நடித்து இருக்கிறார்..ஆனால் இயக்குனராக பெண்களை தவறான ஆட்களாக காண்பிக்கிறார். ஆசைப்படும் மனைவியாக சஜினி நடித்து கடைசியில் வெறுப்பை சம்பாதிக்கிறார். அந்த பெரிய மனிதராக ஸ்டாலின் வருகிறார். பெண்களால் சமூகம் சீரழிகிறது. ஆண் கள் பழிவாங்குகிறார்கள் என்ற தவறான கரு உறுத்துகிறது.

நாகபந்தம்
மரணத்தை வெல்லும் சக்திக்காகவும், இந்த உலகத்தையே ஆள வேண்டும் என்ற ஆசைக்காகவும் நடக்கும் போராட்டங்களை மையமாக வைத்து உருவான புராணம் கலந்த கதை. அந்த அதீத சக்தியை தரும் ‘பிரம்ம கமலம்’ என்ற மலருக்காக நடக்கும் யுத்தம்தான் நாகபந்தம் கதை. தெலுங்கில் வெளியாகி தமிழில் டப்பாகி உள்ளது. 1962-ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜெகபதி பாபு ‘நாகபந்தம்’ என்ற ரகசியத்தை கண்டுபிடிக்க முயல்கிறார். அப்போது, ரங்கநாதசுவாமி கோவிலில் உள்ள விஷ்ணுவிடம் இருக்கும் பிரம்ம கமலத்தை ஒரு கும்பல் திருட திட்டமிடுகிறது. அதே சமயம் ஹீரோ விராட் கர்ண தன் தங்கையின் திருமணத்தை நடத்த போராடும் போது அந்த பிரம்ம கமலத்துக்காக வில்லன் ரிஷப் சஹானி ஹீரோ குடும்பத்தை அழிக்க அவர் எப்படி பழி வாங்கினார். அந்த மலர் மர்மம் என்ன? அதனால் ஏற்படும் சண்டைகள். அது கைக்கு போனது என்பது கதை.

அனந்த பத்மநாப சுவாமி கோவிலுக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பது கூடுதல் கதை முதல் பாதியில் கதை பெரிதாக இல்லை என்றாலும், விஷுவல்ஸ் மற்றும் பாடல்கள் செம இடைவேளை ட்விஸ்ட், இரண்டாம் பாதி திருப்பம்..ஆனால் அதுவும் மெதுவாக நகர்வது ஏமாற்றம். பிளாஷ்பேக் காட்சிகள் குழப்பம் . அரை மணி நேரத்திற்கும் அதிகமாக இழுக்கும் கிளைமாக்ஸ் சலிப்பு ஹீரோ விராட் கர்ணா நடிப்பு, ஹீரோயின் நபா நடேஷ், . தொல்பொருள் ஆராய்ச்சியாளராக ஜெகபதி பாபு, பைராகியாக வரும் கருடா ராமின் நடிப்பும் படத்திற்கு பிளஸ் வில்லனாக ரிஷப் மிரட்டியிருக்கிறார். மற்றபடி விஷூவல் ட்ரீட், புராண கதை, சனாதனம் விரும்புகிறவர்களுக்கு மட்டும் நாகபந்தம் பிடிக்கும்.




