குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தனர்.

இந்த நிலையில் இன்று வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அருவிப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.