இனி பைக்கே ஓட்ட முடியாது… டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து RTO உத்தரவு!

டிடிஎஃப் வாச வாசனின் விபத்து குறித்து தொடர் விசாரணையில் அவருடைய வாகன ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட  வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.   யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை…

டிடிஎஃப் வாச வாசனின் விபத்து குறித்து தொடர் விசாரணையில் அவருடைய வாகன ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட  வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  

யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. யூடியூப்பில் இவருக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார் டிடிஎப் வாசன். அவர் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ பதிவிடுவதால் அது அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் செயல் என எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் அதிவேகமாக பைக் ஓட்டி அதில் சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன், தற்போது கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.