தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்…

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக இடம்பெற துவங்கியுள்ளன. அவ்வாறு கேரள மாநில வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மழவன் சேரம்பாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாம் இட்டு வருகின்றன.

இதனால் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும், குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்கவும் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தும் வருவதோடு, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள மழவன் சேரம்பாடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென, தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளதோடு, இரவு நேரங்களில் யாரும் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.