“உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சி பாஜக” – தகவல் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை!

உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகையில் வால்டர் ரஸ்ஸல் மெட் கட்டுரை ஒன்றை…

உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகையில் வால்டர் ரஸ்ஸல் மெட் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் தேசிய நலனை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்தியாவில் ஆட்சி செய்யக்கூடிய பாரதிய ஜனதா கட்சி உலகிலேயே மிக முக்கியமான வெளிநாட்டு கட்சியாகும். ஆனால் அந்தக் கட்சி குறைவாக மதிப்பிடப்படுகிறது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இது 2024ம் தேர்தலில் பிரதிபலிக்கும்.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஜப்பானுடன், இந்தியாவும் மிக பொருளாதார சக்தியாக மாறி வருகிறது. வரும் காலத்தில் வளர்ந்து வரும் சீன சக்தியை சமநிலைப்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகள் வீழ்ச்சியடையும். அப்போது யாருடைய உதவியும் இல்லாமல் பாஜக அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும்.

அண்மைச் செய்தி:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் கோலாகலம்!

இந்தியர்கள் அல்லாதவர்கள் ஏன் பாஜகவை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றால், அந்தக் கட்சி அவர்களுக்கு அறிமுகமில்லாத அரசியல் மற்றும் கலாச்சார பின்னணியிலிருந்து வளர்கிறது. அதனால் அவர்களால் பாஜகவை சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை. இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.