முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

உங்களை மட்டும் கொசு அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா?


ஜனனி

கட்டுரையாளர்

என்னை மட்டும் பயங்கரமாக கொசு கடிக்கிறதே என என்றாவது புலம்பியதுண்டா? அப்படி அவதிப்படும் போது, அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என யோசித்ததுண்டா? இதற்கு பின்னால் பல அறிவியல் காரணங்கள் இருக்கிறது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்…

கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற பல மோசமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பெண் கொசுக்கள் தான் மனிதர்களை கடிக்குமாம். கொசுக்களின் இனபெருக்கத்திற்கு, மனிதர்களோட ரத்தத்தில தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. லியோ டிசரில் நடிகர் விஜய் Bloody sweet-னு சொல்கிற மாதிரி, மனிதர்களின் ரத்தம் இனிப்பாக இருக்கும், இதனால் தான் கொசு அதிகமா கடிக்கிறது என சிலர் சொல்வது எல்லாம் வதந்தி என ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொசுக்கள் வெகு சிலரை மட்டுமே வன்மத்துடன் தாக்குவதக்கு பல அறிவியல் காரணங்கள் இருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், கொசுக்களுக்கு ’ஓ’ வகை ரத்தம் இருப்பவர்களை தான் அதிகம் பிடிக்குமாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மற்ற ரத்த பிரிவு இருக்கும் மனிதர்களை ஒரு முறை கொசு கடித்தால், ஓ வகை ரத்த பிரிவு இருப்பவர்களை இரண்டு முறை கடிக்கும்னு ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஓ வகை ரத்தத்திற்கு பிறகு கொசுக்களுக்கு அதிகமாக பிடித்தது, கார்பன் டை ஆக்ஸைடு. யாரோட உடலில் அதிகமான கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறதோ, அவர்களை கொசுக்கள் அதிகமா டார்கெட் செய்யுமாம். கார்பன் டை ஆக்ஸைடுக்கு பிறகு கொசுக்கள் விரும்பி, தேடி வருவது, வியர்வைகள்.

சிலருக்கு சாதாரணமாகவே அதிகமாக வியர்வை வரும். இன்னும் சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் வியர்வை வரும். ஏன் என்றால், உடற்பயிற்சி செய்யும் போது நம் தசைகள் இறுக்கமாகும். அப்படி கடினமாகும் தசைகளை சரி செய்ய, இயற்கையாகவே நம் உடலில் இருந்து லாக்டிக் அமிலமும், அமோனியாவும் சுரக்குமாம். இப்படி வெளியாகும் இந்த அமிலம் கொசுக்களுக்கு ஒரு க்ரீன் சிக்னல் என சொல்லலாம்.

அதேபோல, உடல் வெப்பம் அதிகம் கொண்டவர்களையும் கொசுக்களுக்கு அதிகம் பிடிக்குமாம். இப்படி உடல் சூடு அதிகம் இருப்பவர்களின் ரத்தம் அடர்த்தியாக இருக்குமாம். எளிமையாக ரத்ததை உறிய கொசுக்களுக்கு இது உதவி செய்யுமாம்.

அடுத்து, அதீத கொசு கடிக்கு நாம் உடுத்தும் உடையும் காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கிறது. கொசுக்களுக்கு அடர் நிறங்கள் தான் முதலில் தெரியுமாம். அப்படி அடர் நிற உடை அணிந்து, கொசுக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு சென்றால், நீங்க காலி.

நாம் என்ன சாப்பிடுகிறோம், என்ன அருந்துகிறோம் என்பதை பொருத்தெல்லாம் நம்மை கொசுக்கள் குறிவைத்து கடிக்கும் என்று கூறினால் உங்களால் நம்பமுடியுமா? உண்மைதான், நாம் என்ன சாபிடுகிறோமோ அதற்கு ஏற்ற மாதிரி தான் நம் உடலில் இருந்து அமிலமோ, வியர்வையோ அல்லது உடல் சூடோ வெளியேறும். இதை கொசுக்கள் கண்காணிக்குமாம். அந்த வகையில் பார்த்தால், மது அருந்துபவர்களை, குறிப்பாக பீர் அருந்துபவர்களை கொசுக்கள் விடாம விரட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கொசுக்கள் சிறந்த பார்வை திறன் உடையவையாம். நான் முன்பு கூறிய சிக்னலை எல்லாம் கொசுக்கள் அதன் கண்கள் வழியாக தான் பார்த்து தெரிந்துக்கொள்ளுமாம். அவை நம்மை கடிப்பதற்கு முன் அருகில் இருந்து நம்மை ஸ்கேன் செய்யுமாம். அப்படி கண்காணித்த பிறகு, நம் மீது அமருமாம். அப்படி அமர்ந்த பிறகு அதன் கால்களில் உள்ள சுவை உணரிகளை பயன்படுத்தி, கடிக்க சரியான இடத்தைக் கண்டறியும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்று நாடகமாடிய தாய் கைது

EZHILARASAN D

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

G SaravanaKumar

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 14 பேருக்கு சம்மன்: நீதிமன்றம் அதிரடி

Web Editor