டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த ரயில்வே பயணிகளிடமிருந்து 100 கோடி ரூபாய் அபராதம் வசூலித்து மும்பை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களுள் மிக முக்கியமானது ரயில்வே துறை. மும்பை ரயில்வே கோட்டத்தில் ஏப்ரல் 2022ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 18 லட்சம் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர். இவர்களிடமிருந்து 100 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே கோட்டத்திலிருந்து அபராதமாக 60 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
புறநகர், விரைவு என அனைத்தும் ரயில்களிலும் டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வகுப்பு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 1.45 லட்சம் பயணிகளிடமிருந்து ரூ.5.05 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அண்மைச் செய்தி :”மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்” – அரவிந்த் கெஜ்ரிவால்
இதுகுறித்து பேசிய மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் கூறுகையில், “எங்களுக்கு அபராதம் வசூலிக்க இலக்கு எதுவும் இல்லை. பயணச்சீட்டு சரிபார்ப்பு மூலம் எங்களின் முக்கிய நோக்கம் பயணிகளின் பயணத்தை வசதியாக மாற்றுவதாகும்” என்று தெரிவித்தார்.







