ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு ஏன் பயப்படுகிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது சகோதரர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் பயப்படுகிறது? சபை உறுப்பினர்களுக்கு பதிலளிக்கவும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.

எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.