2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் திசை, களப்பணிகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தங்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்த கட்ட அரசியல் செயல்பாடுகள், அமைப்பு ரீதியான வலுப்படுத்தல், தேர்தல் பணிகள், களநிலை அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.







