“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே, சாதி வாரியான…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே, சாதி வாரியான கணக்கெடுப்பைத் தொடங்குவோம் என ராகுல் காந்தி சத்தீஸ்கரில் பேசியுள்ளார். சத்தீஸ்கரில் நடைபெறவிருக்கும் சட்ட பேரவைத் தேர்தலையொட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, ”எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம். எங்களின் ஆட்சி மத்தியில் அமைந்தால் அடுத்த 2 மணி நேரத்தில் அதற்கான வேலையைத் தொடங்குவோம். சத்தீஸ்கரில் ஆட்சியமைத்தால் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ”பொதுபிரிவின்(ஓபிசி) அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் (மோடி) ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களின் உரைகளில் ஏன் இது குறித்து பேசுவதில்லை? எங்கள் ஆட்சியின் போது திரட்டப்பட்ட தகவல்களை ஏன் வெளியிடவில்லை? இன்றைய இந்தியாவில் பொதுபிரிவினருக்கு எந்தளவிற்கு பங்களிப்பு இருக்க வேண்டுமோ அந்த அளவு கிடைக்கவில்லை. பொதுபிரிவு இளைஞர்களிடம் இந்த உண்மையை மறைக்க பார்க்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் சட்ட பேரவை தேர்தல் நவ.7, 17-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.