முக்கியச் செய்திகள்உலகம்செய்திகள்விளையாட்டு

ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி! நியூசிலாந்து அணி கடைசி வரை போராடி தோற்றது!

உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் கடந்த அக்.5ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388/10 ரன்கள் எடுத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கான்வே 28 ரன்களுக்கும் வில் யங் 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி 77 பந்துகளில் சதமடித்தார். 89 பந்துகளில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

டேரில் மிட்செல் 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்த வந்த டாம் லாதம் (21) பிலிப்ஸ் (12), சான்ட்னர்(17) விரைவிலேயே ஆட்டமிழக்க ஜிம்மி நீஷம் நிலைத்து ஆடி அரைசதமடித்தார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவையானபோது ஸ்டார்க் வைட் வீசி பவுண்டரி கொடுக்க ஆட்டம் சூடுபிடித்தது. 5வது பந்தில் நீஷம் ரன்னவுட் (58 ரன்கள்) ஆனார். கடைசிப் பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. த்ரில் வெற்றி பெற்றது. ஆஸி. சார்பாக ஜாம்பா 3 விக்கெட்டுகளும் ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு பேரணி!

Web Editor

சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து; 16 பேர் பலி

Jayasheeba

சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!

Jeba Arul Robinson

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading