தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளாராக களம் காண வாய்ப்புள்ளது என்பதை களம் யாருக்கு பகுதியில் காணலாம்.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினராக திமுக வின் தமிழச்சி தங்கபாண்டியன் இருக்கிறார். மீண்டும் அவரே போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் இம்முறை அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஒருவேளை காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல மக்கள் நீதிமையம் இந்த கூட்டணியில் இணைந்தால் அவர்களும் இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அக்கட்சியின் தலைவரான கமல்ஹாசன் போட்டியிவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சரின் மகனுமான ஜெயவர்த்தனுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பட்டியலில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கரு.நாகராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 







