நீட் மறுதேர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – அடுத்த மாதம் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜீலை 21-ஆம் தேதி நடைபெறும் நீட் மறுதேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தேர்வு முகமை ஆண்டு தோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி 2026-27 ஆம் ஆண்டுக்கான நிட் தேர்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து நிட் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே வெளியானதாக புகார் எழுந்தது. இதனால் 3-ஆம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்ற ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஹால்டிக்கெட்டும் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீட் மறுதேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், மோகனா ஆகியோர் வரும் ஜீலை மாதம் நீதிபதி நரசிம்மா தலைமையில் இந்த மனு விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.