சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டவிதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டுமோ, அங்கு அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டவிதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டுமோ, அங்கு அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு தேர்தல் பரப்புரையில் கூறியதுபோல், மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000, தகுதியுள்ள நபர்களுக்கு இந்த ஆண்டு வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இதையும் படியுங்கள் : ஜெயலலிதாவின் அழகு, அறிவு, துணிச்சல் வேறு யாருக்கும் வராது! – ரஜினிகாந்த் புகழாரம் 

தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயப் பணிகள் நிறைந்த பகுதிகளை வனவிங்குகள் சேதப்படுத்துவதாக புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. அதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை என்னிடம் உள்ளது. அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம்”  என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.