இரவு 10 மணி வரி எங்கெல்லாம் மழை?

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தவட சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் உள்கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை தென் உள்கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை )Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரு மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.