“இனிவரும் தேர்தல்களில் தவெகவுடன் இணைந்து பயணிப்போம்” – திருமாவளவன் அறிவிப்பு!

உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கோலாகலமாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசியல் சூழல், தமிழ் தேசிய உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்த முக்கியக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.