தமிழ்நாடு சட்டப்பேரவையில் கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீட்மானம் கொண்டு வந்தன.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “துப்பாக்கி சூடுக்கு முறையான விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர் யார் என்று நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த படுகொலை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது, உயர்நிலைக் குழு அமைத்து தவறு உள்ளவர்கள் மீது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். இது போன்று இனிவரும் காலங்களில் நடைபெறக் கூடாது என முதலமைச்சர் விஜய் கர்நாடகா அரசுக்கு தெரிவித்துள்ளார். நீதிபதிகள் தலைமையில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதனை தமிழ்நாடு அரசு Follow up செய்து வருகிறது.” என்றார்.




