இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – 284 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகஸ்ட் 15-ஆம் தேதி காலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் தேவ்தத் படிக்கல் சதமடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் தாமதாமாக தொடங்கியது. இதனால் குறைந்த ஓவர்களை மட்டுமே வீசப்பட்டது. இரண்டாவது நாளில் 167 ரன்கள் எடுத்த நிலையில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய துருவ் ஜுரேல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க முடிவில் பிரசீத் கிருஷ்ணா 1 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் தினுஷா 100 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் மனவ் சுதர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 178 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது. ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.