GOLD RATE | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160 விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலை வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.