செஞ்சி அருகே சிவன் கோயிலில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பட்டியலின மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த கிராமத்தில் அனைத்து சமூக பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து புதிதாக சிவன் கோயில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த கோயிலின் நிர்வாகி ஆன கனகராஜ் என்பவர் பட்டிலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு, கோயிலின் தேர் வராது என்று தெரிவித்ததால், மனா வருத்தமுற்றதோடு, தங்களுக்கும் அந்த கோவிலில் உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் பட்டியலின மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல், தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்த கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்து பட்டியல் இன மக்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இந்நிலையில் இன்று திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டாதவி தேஜாபட்டின மக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில், அங்கிருந்து ஒரு சில நிமிடங்களிலேயே அவர் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தங்களிடம் முறையான விசாரணை நடத்தாமல் சார் ஆட்சியர் அங்கிருந்து கிளம்பி சென்றதால் ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள, புதுச்சேரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சத்தியமங்கலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பி. ஜேம்ஸ் லிசா