டெல்டா பாசன சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 176 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை கடந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் மொத்த கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூன் 11 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதுடன், அவரின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதையும் படியுங்கள் : கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் – 24 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!!
தொடர்ந்து, மறுநாள் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். இந்த அறிவிப்பால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







