அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு – லேப்டாப், ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையில் 1000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் 26 இடங்களில் சோதனை நடைபெற்றது. அவரது சகோதரர் அசோக் வீட்டிலும், அசோக்கின் நண்பர்கள் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு – டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி!!

அதேபோல் சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. சோதனை முடிவில் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.