கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் – 24 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!!

கர்நாடாகாவில் இன்று மேலும் 24 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள்…

கர்நாடாகாவில் இன்று மேலும் 24 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி, சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது.  முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து  துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – குவாலிஃபயர் 2-ல் மும்பையை வீழ்த்தி அசத்தல்!!

இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 24 எம்எல்ஏக்கள், இன்று பதவியேற்க உள்ளனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை 11:45 மணிக்கு நடைபெறும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, எச்.கே.பாட்டில், மது பங்காரப்பா உள்ளிட்டோர் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.