“அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!

மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 260 பேர்,100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம்…

மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 260 பேர்,100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்,
தலைமையாசிரியர் டி.ராஜசேகரன் முன்னெடுப்பில் பள்ளி மாணவ மாணவியர்களின்
பெற்றோர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக 260 பள்ளி மாணவ
மாணவியர்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர். இதுதொடர்பாக பள்ளி வளாகத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அஞ்சல் அட்டைகள்
வழங்கப்பட்டது. அதில் மாணவ மாணவியர்கள் தங்களது கைப்பட கடிதததை எழுதினார்.

இதையும் படியுங்கள் : #SRHvsCSK : 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!

அந்த கடிதத்தில் மாணவர்கள் எழுதியதாவது :

“அன்புள்ள அப்பா அவர்களுக்கு, உங்கள் மகன்/மகள் எழுதும் கடிதம். நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் அம்மா, அக்கா, அண்ணன் மற்றும் தம்பி எல்லோரும் நலமா? அப்பா வருகிற 19.4.2024-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த
வாக்குப்பதிவில் தாங்கள் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுவதோடு, இத்தகவலை அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அக்கா, அண்ணன் உள்ளிட்டவர்களுக்கு
தெரிவிப்பதுடன் அருகில் வசிக்கும் நமது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்
தெரியப்படுத்தி தவறாமல் வாக்களித்து எங்களுக்கு வழிகாட்டிட தங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் 19-ஆம் தேதி வாக்களித்த பிறகு அடையாளம் மையுடன் வீடு திரும்பும் அப்பா அம்மா வரவேற்க காத்திருக்கும் உங்கள் அன்பு மகன் / மகள். இப்படிக்கு ஜனநாயக கடமை ஆற்ற இருக்கும் தங்களின் மகன்/மகள்”

இவ்வாறு மாணவர்கள் தங்களின் கடித்தில் எழுதினர்.

பின் அருகிலுள்ள அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டைகளை அஞ்சல் பெட்டியில் செலுத்தினர். இதைபோலவே கடந்த ஆண்டில் இப்பள்ளி மாணவ மாணவியர்களின்
கடிதத்தால் போதை பழக்கத்திலிருந்து சில பெற்றோர்கள் மீண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.