அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
அசாம் மாநிலம் நல்பாரா, பாக்சா, லக்கிம்பூர், தமுல்பூர், பார்பெட்டா மாவட்டங்கள் கனமழை வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 780 கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன.
இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பரிதவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 10 ஆயிரத்து 591 ஹெக்டேர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் அசாம் வெள்ளத்தில் 45000க்கும் மேற்பட்ட வீடுகளை இழந்து பரிதவிப்பு வருகின்றனர். மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மனோஜ் ராஜ்போங்ஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் “ எனது வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து என் குடும்பம் தற்போது வெளியில் தான் வசித்து வருகிறோம். இதனால் எங்கள் வீடு சேதமடைந்துள்ளது. தற்போது என் வீட்டில் முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது. நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது” என தெரிவித்தார்.







