”அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” : அமைச்சர் பொன்முடி பேட்டி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதால், கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  சென்னையில் உள்ள  தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதால், கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  சென்னையில் உள்ள  தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது :
“அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2,40,000  மாணவர் விண்ணப்பித்துள்ளனர்.  மொத்தமாக 1,07,299 இடங்கள் உள்ளன. அதில் தற்போது வரை 80,084 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% இடத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

அதேபோல அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரித்துக்கொள்ளலாம்.

சமூக நீதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வேறு கல்லூரிக்கு சென்றாலும் கட்டணம், சான்றிதழ்களை கல்லூரிகள் திரும்ப கொடுக்க வேண்டும்.

திருச்சி பெரியார் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அது தவறான தகவல்” என அமைச்சர் பொன்முடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.