அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்பியுமான சிவி.சண்முகத்திற்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.2001ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட அவர் 2006ஆம் ஆண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதனைத்தொடர்ந்து 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். 2021ஆம் ஆண்டு விழுப்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







