செய்திகள்

முதல் டோஸ் கோவிஷீல்டு, 2-வது கோவேக்சின்: மாற்றிச் செலுத்திய மருத்துவமனை!

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் 2வது டோஸ் கோவேக்சினும் மாற்றி செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் எந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார்களோ, அதே தடுப்பூசியைதான் இரண்டாவது டோஸும் செலுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் அதை மாற்றி செலுத்தியதால் சுமார் 20 பேர் கண்காணிப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள அரசு மருத்துவமனையில், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. கிராமம் ஒன்றைச் சேர்ந்த 20 பேர் அதை செலுத்திக் கொண்டனர். அவர்களுக்கு கடந்த 14- ஆம் தேதி 2-வது டோஸ் செலுத்தப்பட்டது. முதல் டோஸ் கோவிஷீல்டு செலுத்தப்பட்ட நிலையில் 2-வது டோஸ் தவறுதலாக கோவாக்சினை செலுத்தியுள்ளனர். அந்த கிராமத்தினருக்கு தாங்கள் செலுத்திக்கொண்டது எந்த தடுப்பூசி என்ற விவரம் முதலில் தெரியவில்லை.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசியை மாற்றி செலுத்திக்கொண்ட 20 பேரில் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சந்தீப் சவுத்ரி தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்டவர்களில் ஒருவரான ராம் சூரத் என்ற முதியவர் கூறும்போது, நான் முதலில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். ஆனால், இரண்டாவது டோஸ் செலுத்த சென்றபோது யாரும் எதையும் கவனிக்கவில்லை. மாற்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

பமீலா கோஸ்வாமி விவகாரம்; பாஜக தலைவரின் உதவியாளர் சதி செய்வதாக குற்றச்சாட்டு

Saravana Kumar

கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு

Ezhilarasan

’விஜய் 67’: இயக்குநர் யார்?

Halley karthi