முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

’மனைவியாக ஏற்க முடியாது’ என்றதால் தற்கொலை: பிரபல நடிகரின் மகன் கைது!

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, மலையாள நடிகர் உண்ணி தேவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள வில்லன் நடிகர் ராஜன் பி.தேவ். இவர் தமிழில் சூரியன், ஜென்டில்மேன், ரெட், ஆதி, தெனாவட்டு உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், சில வருடங்களுக்கு முன் மரணமடைந்துவிட்டார். இவர் மகன், உண்ணி தேவ். மலையாள நடிகரான இவரும் திருவனந்தபுரம் அருகே உள்ள வெம்பாயம் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவரும் காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 35 பவுன் நகை, 5 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பின் இருவரும் கொச்சியில் உள்ள காக்கநாட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் உண்ணி தேவ், அதிகமாக வரதட்சணை கேட்டு பிரியங்காவை கொடுமைப்படுத்தியதாகக் கூறப் படுகிறது. இதுதொடர்பாக உண்ணி தேவ் மீது பிரியங்காவின் சகோதரர் விஷ்ணு வட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டில் தூக்கு மாட்டித் பிரியங்கா, தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வட்டப்பாறை போலீசார் உண்ணி தேவ்-வை கைது செய்து விசாரித்தனர். தொடர்ந்து பிரியங்காவை திட்டி வந்துள்ள உண்ணி தேவ், இனி உன்னை மனைவியாக ஏற்க முடியாது என்று கூறினாராம். இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின் போலீசார் அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Related posts

அழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்: டிடிவி தினகரன்

12 மொழிகளில் வெளியாகிறது ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’

Karthick

காதலி, அவரது தாயை கொன்று, காதலன் தற்கொலை!

Niruban Chakkaaravarthi