மளிகை கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிக்கவேண்டும்: வணிகர் சங்கம்

மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்திட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார் சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அவர்,…

மளிகை கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்திட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார்

சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காலை 10 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகளை திறந்திருப்பதால், வியாபாரம் குறைவாக நடைபெறுகிறது.

அதேநேரத்தில், விதிகள் மீறப்படுமானால், அதிக அளவு தொகையை அதிகாரிகள் அபராதமாக விதிப்பதாகவும் விக்கிரமராஜா குற்றம் சாட்டினார். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8 மணி முதல் 12 மணி வரை அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.