முழு ஊரடங்கில் பழக்கடைகள், நாட்டு மருந்து கடைகளுக்கு அரசு அனுமதி!

முழு ஊரடங்கு காலத்தில் பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.…

முழு ஊரடங்கு காலத்தில் பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றுப் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 24 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்கறி, மளிகை கடைகளை போன்று பழக் கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை கடைபிடித்து பழ கடைகளும் நாட்டு மருந்து கடைகளும் செயல்பட தமிழக அரசு இப்போது அனுமதி அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.