நாடு முழுவதும் ஒரே நாளில்ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,4 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியை 15 லட்சத்தை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 18 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.




