மின்சார கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்: அமைச்சர்!

பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள்…

பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த நேர்ந்தால் அடுத்த மின் கணக்கீட்டில் கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சேலத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “மின் கட்டண குளறுபடி குறித்து பயனீட்டாளர்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்ற அவர், உரிய ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


மேலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின் போது அந்த தொகை கழிக்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிகூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.