ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர் பல்லாவரத்தில் பணியாற்றிய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று சுமார் 9 மணி நேரமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஆணையர் சிவக்குமார் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலராக ஆணையர் சிவகுமார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
—-கா. ரூபி








