முருங்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.11 கோடி – தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் முருங்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் முருங்கை விவசாயத்தை மேம்படுத்த தேனி,…

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் முருங்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் முருங்கை விவசாயத்தை மேம்படுத்த தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர் மற்றும் மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலமாக்கி முருங்கை இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஆண்டில் 1,000 ஹெக்டர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்க படுவதோடு முருங்கை ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் ரூ.11 கோடி மதிப்பில் பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்த பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளர்.

இதற்கு தூத்துக்குடி மாவட்ட முருங்கை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஊடு பயிரான முருங்கை விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.  நிலமில்லாத முருங்கை விவசாயிகளுக்கும் மானியம் சென்று அடைவதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—ம. ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.