உசிலம்பட்டி அருகே 4-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி மறியலில் ஈடுபட்டுனர்.
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினா் கடந்த 17ஆம் தேதி முதல் பால் ஏற்றுமதி நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உசிலம்பட்டி எம்.பாறைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் சுமார் 100 லிட்டர் பாலை சாலையில் கொட்டி கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
—கா.ரு்பி.







