தவெகவுக்கு விசிக ஆதரவு – ஆட்சியமைக்கிறார் விஜய்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நடத்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற தவெக நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் காட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.