தமிழ்நாட்டில் நடத்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் தவெக 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற தவெக நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து தவெகவுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் காட்டினார். தொடர்ந்து விசிகவின் சட்டமன்ற குழு தலைவராக வன்னியரசு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் விசிக ஆதரவு வழங்கியதால் எம்.எல்.ஏ. ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் ஆளுநரை சந்திக்க தவெக தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







