வெளியாவதற்கு முன்பே வசூலில் சாதனை படைத்த ‘வாரிசு’

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூல் குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என…

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூல் குவித்து வருவதாக தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கில் இந்த படத்திற்கு வாரசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். விஜய்யின் வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே வசூல் குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை இதுவரை இல்லாத அளவு அதிக தொகை கொடுத்து அமேசான் பிரைம் வாங்கி உள்ளதால் தயாரிப்பாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விஜய்யின் 67-வது படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

வெப்ஸ்டோரியாக காண – https://news7tamil.live/web-stories/varisu-vijay

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.