மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிப்ரவரி 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டு மே 22, 2024ல் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
இதில் முதற்கட்டமாக கல்வி வளாகம், வெளி நோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்றவை கட்டப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடி ஆகும், மார்ச் மாதம் முதல் மாணவர்கள் இந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி பிப்ரவரி 28 ஆம் தேதிதிறந்து வைக்க உள்ளார். இதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.







