விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூல் குவித்து வருகிறது

வாரிசு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை இதுவரை இல்லாத அளவு அதிக தொகை கொடுத்து அமேசான் பிரைம் வாங்கி உள்ளது

2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது

விஜய்யின் வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது

பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்