அனைவருக்குமான முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதற்கு கண்டம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய அண்ணாமலை, இது ஒரு சரித்தர கூட்டமாக உள்ளது. ஸ்டாலின் 10 ஆண்டுகளாக முதல்வராக வருவதற்கு காத்திருந்தார். எல்லோருக்கும் சமமானவராக இருப்பேன் என்றார். ஆனால் கலவரத்திற்க்கு காரணமானவர்கள் பற்றி இதுவரை முதலமைச்சர் பேசவில்லை. 2 ஜி ஊழல் வாதி, தான் தொடர்ச்சியாக ஊழல் செய்யவில்லை என்று சொல்லி கொண்டிருக்கிறார். இதுபோன்ற தொடர் அவதூறு பேச்சுகள் திமுகவுக்கு புதிதல்ல என்று கூறினார்.
மத்திய அரசு கடந்த 5 நாட்களுக்கு முன் இந்தியாவின் 105 இடங்களில் PFI நிர்வாகிகள் வீட்டுகளில் சோதனை செய்தார்கள். அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆ.ராசா பேச்சை ஒட்டி வெட்டி பேசுவதாக முதலமைச்சர் கூறுவது ரொம்ப மோசமானது. திமுக அமைச்சர்கள் மேயரை தரக்குறைவாக நடத்துகிறார்கள்.
பெண்கள் பேருந்ததில் ஓசி பயணம் செய்கின்றனர் என்று சொன்ன அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை இல்லை. குறவர் இனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை நிற்க வைத்து பேசிய எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மேல் நடவடிக்கை இல்லை என்று கூறினார்.
கோவையில் பரம்பிகுளம் அணையில் மதகு உடைந்ததிற்கு காரணம் என்னவென்றால், 1 அணை பராமரிப்பிற்காக 1 கோடி ஒதுக்க வேண்டிய நிலையில் கமிஷன் அடித்து போக 15 லட்சம் தான் ஒதுக்கியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கும் – கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு என்ன உறவு என்று தெரியவில்லை. நீர் பிரச்சனையில் டீலிங் வைத்து பேசி கொண்டிருக்கிறார்கள். கோவையில் பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி, மின்சாரத்துறையில் ஊழல், கோவை மாநகராட்சியில் டெண்டர் விடுவதில் ஊழல் இப்படி விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்.
எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்த காவல்துறையினர், ஏன் காக்கி சட்டை போட்டோம் என்று வருத்தபடுவீர்கள். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் முதல்வரின் வீட்டை முற்றுகையிடவும் நாங்கள் தயாரக உள்ளோம். அனைவருக்கும் சமமான முதல்வராக ஸ்டாலின் இருக்க வேண்டும். 5 ஆண்டுகளை நீங்கள் முழுமையாக ஆட்சி செய்து முடிக்க பாருங்கள். 2024 – ல் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டபேரவை தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று கூறினார்.







