தென் ஆப்பிரிக்காவுடன் நாளை முதல் டி20-கேரளா வந்த இந்திய கிரிக்கெட் அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி அந்த மாநிலம் வந்தடைந்தர். டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி அந்த மாநிலம் வந்தடைந்தர்.

டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன்
விளையாடுகிறது. தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20
போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் முதல் டி20 போட்டி வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

2-வது டி20 போட்டி அக்டோபர் 2ம் தேதி அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியிலும், 3-வது டி20 போட்டி அக்டோபர் 4-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே திருவனந்தபுரம் வந்தடைந்த நிலையில் இந்திய அணி இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தனர். விமான நிலையம் வந்த அவர்களை சொகுசு பேருந்து மூலம் கோவளம் பகுதியில் உள்ள ஹோட்டல் லீலாவில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.