திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பியை கடத்தி அடித்து சித்தரவதை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் என்பவர் கந்து வட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம் காயம்பட்டு பகுதியைச் சார்ந்த தையல்தொழில் பார்த்து வரும் முனியப்பன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூபாய் ஒரு லட்சம் கந்துவட்டிக்கு பெற்றுள்ளார்
கொரானா காலத்தில் வேலை இல்லாமல் இருந்ததால் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாமல் இருந்த நிலையில் திருப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முனியப்பன் தம்பியான சத்தியமூர்த்தியை கந்துவட்டி தொழில் செய்யும் பாக்யராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான சிரஞ்சீவி, வரதராஜன், ராஜ் ஆகிய 4 பேரும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணை வீட்டில் கட்டி வைத்து கத்தியை காட்டி மிரட்டியும் வாங்கிய ஒரு லட்ச ரூபாய்க்கு 3 லட்சம் ரூபாய் வட்டி முதலுமாய் கொடுக்க சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் கூலிப்படையினர் சத்தியமூர்த்தி மனைவி ராணியிடம் போன் செய்து பணத்தை கொடுக்கவில்லையென்றால் உனது கணவரை கொல்வதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ராணி செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அடைத்து சித்திரவதை செய்து இருந்த சத்தியமூர்த்தியை மீட்டுள்ளனர்.
மேலும் ஆட்கடத்தல்- கொலை முயற்ச்சி உள்ளீட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாக்யராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் செங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது







