111 நாட்களுக்குப் பின்னர் 35,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 நாட்களுக்குப் பின்னர் 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 51,864 பேர்…

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 நாட்களுக்குப் பின்னர் 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 51,864 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 2,97,52,294 பேர் குணமடைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,64,375 ஆக குறைந்துள்ளது. கடந்த 101 நாட்களை விட குறைந்த எண்ணிக்கையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கை 97.17 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 42,14,24,881 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,47,424 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதே போல 35.75 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 553 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,03,281 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 45,82,246 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.