அணில் டிரான்ஸ்பார்மரில் ஏறியதால் ஏற்பட்ட மின்தடை

திருப்பூரில் டிரான்ஸ்பார்மரின் மேல் அணில் ஏறியதால் மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் சரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில், டிரான்ஸ்பார்மரில் திடீரென…

திருப்பூரில் டிரான்ஸ்பார்மரின் மேல் அணில் ஏறியதால் மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் சரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில், டிரான்ஸ்பார்மரில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது பின்னர் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரான்ஸ்பார்மரில் சோதனை செய்தனர்.

அப்போது டிரான்ஸ்பார்மரில் இருக்கும் டிப்பரில் அணில் ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். பின்னர் அணிலை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு மின் இணைப்பை சரி செய்தனர்.தமிழகத்தில் அணில்களால் மின் தடை ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த சூழ்நிலையில், தற்பொழுது திருப்பூரில் அணில் டிரான்ஸ்பார்மரில் ஏறியதால் மின்தடை ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.