“ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன்” – கமல்ஹாசன்

ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்ட தேர்தல் பரப்புரைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மைய அலுவலகத்தில்…

ட்ரில்லியன் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றாமல் ஓயமாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கட்ட தேர்தல் பரப்புரைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மைய அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை மெட்ரோவில் பயணம் செய்து ஆலந்தூர் சென்றார்.

பின்னர் ஆலந்தூரில் இருந்து தனது பரப்புரை வாகனத்தில் புறப்பட்ட அவர், போரூர் பாய் கடை பேருந்து நிலையம், கோலப்பாக்கம், கிருகம்பாக்கம், மனப்பாக்கம்
பகுதியில் ஆதரவை திரட்டினார். மேலும் பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம் பகுதியில் தொண்டர்களிடம் பேசினார்.

ஆதம்பாக்கத்தில் பேசிய அவர், முன் கூட்டியே தேர்தல் வருவதால் பரப்புரை செய்யும் நேரம் குறைந்து விட்டதாகவும், ஆனாலும் மக்கள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். நேர்மை என்ற ”இன்ஷியலை” மக்கள் நீதி மய்யம் போட்டுக் கொண்டுள்ளதாகவும், மாற்றத்தின் முன்னணி படையாக நிற்கும் நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம் எனக் கூறிய கமல், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றாமல் ஒயமாட்டேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.