கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இளைஞர் ஒருவர் நொங்கு “கூந்தை “வண்டி ஒட்டி பெட்ரோல் போட முயன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 80, 90களில் விளையாட பயன்படுத்திய நொங்கு “கூந்தை ” வண்டியுடன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பெட்ரோல் பம்பிற்கு சென்று இளைஞர் ஒருவர் பெட்ரோல் போட முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







