முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபானங்களை திருடிய மர்ம கும்பல்!

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் திருடப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே நந்தியாலம் பகுதியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடையின் உள்ளே இருந்த விலை உயர்ந்த மதுபானங்களை திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு இருப்பதைக்கண்டு ரத்தனகிரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று உடனடியாக விசாரணையை துரிதப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். திருடப்பட்ட மதுபானங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது ஊரடங்கு நேரத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement:

Related posts

புதுச்சேரி சட்டப்பேரவையில் கிருமி நாசினி தெளிப்பு!

Karthick

இந்தோனேசியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Saravana

மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது – ஜக்கி வாசுதேவ்

Gayathri Venkatesan