முக்கியச் செய்திகள் உலகம்

சீனாவில் ஊர் சுற்றும் யானைக் கூட்டம்: வைரல் புகைப்படங்கள்!


சீனாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக சுற்றித்திரியும் யானைகள்  காட்டுப் பகுதியில் அயர்ந்து ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


சீனாவில் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று குட்டி யானைகள், ஒரு ஆண் யானை உள்பட 15 யானைகள் கூட்டமாகக் கடந்த 15 மாதங்களாக சுற்றி திரிந்து வருகிறது.  இதுவரை சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவு பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற காட்டு யானைகளை ஒப்பிடுகையில் இந்த யானைக் கூட்டம் நெடுந்தூரம் பயணம் செய்துள்ளதாக  விலங்குகள் நல ஆர்வலர்கள்  தெரிவிக்கின்றனர். சீன அரசு  இந்த யானைக் கூட்டத்தின் பயணத்தை 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.

யானைகளின் பயணத்தைத் தினந்தோறும் கண்காணிக்கப் பிரத்தியேகமாக 500 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 14 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

குன்மிங் பகுதியில் காடுகள், நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடந்து செல்லும் போது வயல்களில் பயிர்கள் சேதம், வீடுகளின்  கதவு மற்றும் ஜன்னல்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இதுவரை  யானை கூட்டத்தால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  சீனாவில் பிரபலமாக மாறியுள்ள இந்த ஊர் சுற்றும் யானைக் கூட்டம், சியாங் காட்டுப் பகுதியில் களைப்பால் அயர்ந்து, ஓய்வெடுக்கும் காட்சி தற்போது உலகளவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யானைக் கூட்டங்கள் குடும்பத்தோடு ஓய்வெடுக்கும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு  வருகிறது. 

Advertisement:

Related posts

திருமணத்தன்று ஓடிப்போன மணமகன்; விருந்தினருக்கு அடித்த ஜாக்பாட்!

Jayapriya

தமிழகத்தில் 14 கைதிகள் மட்டுமே வாக்களிக்க உள்ளனர்!

எல்.ரேணுகாதேவி

கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!